Shut down all Detention camps/ Secret torture prisons Release all political prisoners

The current Prime Minister of Sri Lanka, Ranil Wikramasinge, came to power with the promise of “democracy and good governance”. But he declared recently that there is no point in talking about the disappeared people and that all those missing were probably dead! This has further opened the wounds of the families of tens of thousands victims who are still missing.

In the aftermath of the genocidal slaughter committed by the previous Sri Lankan regime, numerous Tamil youth and political activists and journalists were arrested and held in various camps, detention centres and secret prisons, without charge and without any account of them being held by the government authorities. It is absolutely disgusting to see that the current government declared that most of them are dead, without any remorse, or sense of responsibility to investigate if such horrendous killings took place. Though many have been killed by the government authorities during their torture, Tamil Solidarity believes that many are still alive in various prisons.

In the so called “democratic Sri Lanka” it is not easy to obtain details of those who are held in prisons. Even after the last regime was voted out by the people, a secret torture prison was maintained in Trinkomale called “Gotabaya” named after notorious ex-defence minister and brother of the ex-president. A few victims who managed to escape these torture camps are living across in Europe in pieces as witness to this horrendous place.

Despite the repeated denials of the Sri Lankan government, Tamil Solidarity maintained from 2009 that such camps did exist and demanded they be shut down and the release of all prisoners. Only in 2015 the UN confirmed the existence of this torture prison. But the Sri Lankan government continues to deny the existence of torture places and refuses to take any action.

This new regime based on so-called “good governance” is now only concentrating on issuing “death certificates”. This is about as far from “adequate action” to satisfy the victims’ families as you can get. It is a further kick in the teeth for these families. We demand answers for the families and for justice.

Where is the list of all those arrested under the last regime?

Where are all the youth arrested by the Sri Lankan army?

In what circumstances did these prisoners die? For what reason were they killed?

What is the answer to those mothers and wives who voluntarily handed their loved ones to the army complying with their demands?

What is the justice for those families who daily search for their loved ones relentlessly?

Where is the Tamil leadership who is supposed to be on the side of these victims?

We must not stay in silence. We must raise our voice in solidarity and demand justice.

 

Tamil Solidarity demands that:

  • All political prisoners should be released immediately
  • Shut down the torture prisons and all detention centres
  • Release all the information about who is held in the known 41 detention centres and other secret detention centres
  • Senior commanders, secret service personnel, politicians and all those involved in this systematic torture must be investigated by a people’s tribunal that includes victims
  • Full information and adequate compensations should be given to all the victim’s families. Adequate facilities and services should be created for these families to live without further fear and persecution

 

[emailpetition id=”14″]

 

”காணாமற் போனவர்களைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருப்பதில் எந்தப்பயனும் இல்லை. காணாமற் போனவர்கள் போனவர்கள்தான். அவர்கள் இறந்திருப்பார்கள்’.

உயிர்களைப் பற்றி அக்கறையற்ற இந்த கதை கூறியது ஒன்றும் சாதாரணமானவர் அல்ல. நல்லாட்சி மலரும் என்ற கோசத்துடன் தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்குவந்த அரசாங்கத்தின் பிரதமராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கதான் இத்தகய எடுத்தெறிந்த பேச்சுப் பேசியிருந்தார்.

திட்டமிட்டு இனப்படுகொலை செய்த இலங்கை சிங்கள இனவெறி அரசாங்கம் ஆயிக்கணக்கான மக்களை அரசியல் கைதியாக்கி யாருக்கும் தெரியாத பல இடங்களில் மறைத்து அடைத்து வைத்து சித்தரவதை செய்கிறது. அதில் சிங்கள அரசப்படைகளின் சித்தரவதைகளில் இறந்தவர்கள் போக- இன்றும் பலஆயிரம் கைதிகள் உயிருடன் உள்ளார்கள் என்ற தகவள்கள் கசிந்துக்கொண்டிருக்கின்றன.

‘சனநாயக குடியரசு’ எனச் சொல்லப்படும் இலங்கையில் அரசியல் கைதிகள் பற்றிய தகவள்களையோ அவர்கள் பற்றிய தேடல்களையோ யாரும் அவ்வளவு இலகுவாக செய்துவிட முடியாது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் அவரது குடும்ப இனவெறி அரசாங்கத்தை மக்கள் வெளியேறற்றிய பின்னும் ரூசூ39;கோட்டபாய’ என்ற பெயரில் திருகோணமலை கடற்படைத்தளத்தை அண்டிய பகுதியில் இயங்கிய சித்தரவகை முகாம்பற்றிய எந்த தகவல்களையோ விசாணைகளையோ புதிய அரசாங்கம் இன்னமும்; செய்ய தயாராக இல்லை. அதி;லிருந்து தப்பி வந்த கைதிகள் பலர் கண் கால் இழக்குமளவு சித்தரவதைகளை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இன்று உலகின் பலநாடுகளில் நடமாடும் சாட்சிகளாக உள்ளனர்.

இத்தகய சித்திரவதை முகாம்களும் இரகசிய தடுப்பு முகாம்களும் இருப்பது பற்றி நீண்டகாலமாக பகிரங்கப்படுத்தி வந்துள்ளது தமிழ் சொலிடாறிற்றி அமைப்பு. இது தவிர திருகோணமலையில் இரகசிய தடுப்பு சித்தரவதை முகாம் இருந்துள்ளது என்பதை 2015 இன் ஆரம்பத்திலேயே ஐ.நா.வின் நிபுணர்குழு உறுதிப்படுத்தியிருந்தது. பலவந்தமாக காணாமற் போகச்செய்யப்பட்டோர் தொடர்பான பணிக்குழுவுக்கு பலதரப்புக்களும் உதவிசெதுள்ளன. அதில் முக்கியமானது International Truth and Justice Project – Sri Lanka என்ற அமைப்பு. இவ்வமைப்பும் இரகசிய தடுப்பு முகாம் பற்றிய பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையின்; எந்தப்பகுதியிலும் அரசாங்கத்தின் இரகசிய முகாம்கள் எதுவும் இல்லலை என்று அரசு மறுத்துவந்தது பொய் என்பதை ஐ.நா குழு அறிக்கை ஆதாரத்திதுடன் வெளிப்படுத்தியிருந்தது. அதற்கு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பபைச்சேர்ந்த முன்னால் பாராலுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பெப்ரவரி 2015 ஆண்டில்; திருகோணமலை அரகசிய சித்தரவதை முகாம் பற்றி பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். அம்முகாமில் இருந்து தப்பிவந்த ஒருவர் மூலமே தான் இந்த தகவல்களை வெளியிடுவதாகவும் சாட்சிகளுக்கு பாதுப்பு உத்தவாதம் தரப்பட்டால் தன்னால் அதனை நிறுபிக்க முடியும் என்றும் பாரளுமன்றில் அவர் தெரிவித்திருந்தார்.

காணாமல் போனவர்கள் இறந்திருப்பார்கள் என்று பொறுப்பற்ற பதிலை அண்மையில்சொன்ன ரணிலே அன்றும் அதனை உடனே மறுத்தது மாத்திரமின்றி அதைபற்றி தான் அப்போது பேச விரும்பவில்லை என்றும் சபையில் பதிலளித்திருந்தார்.

இலங்கைச் சிங்கள இராணுவத்தினரின் தமிழ் மக்கள் மீதான பாலியல் வல்லுறவு சித்திரவதை -சட்டத்துக்கு புறம்பான தடுப்பு என்பன புதியன அல்ல. தாம்தான் உலகமகா சனநாயக நல்லாட்சி செய்யப்பபோவதாக காட்டிக்கொண்டமைத்திரி அரசாங்கத்திலும் கோட்டபாய விட்டுச்சென்ற இரகசிய சித்தரவதை தடுப்பு முகாம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மக்கள் கருத்திற்கொள்ளவேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ பாதுப்பு படைகளின் உயர்மட்டத்தினாலேயே இந்தகைய பாலியல் வன்முறை சட்டவிரோத தடுப்பு மற்றும் சித்தரவதைகள் நன்ங்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுவருவதாகத் தென்னாபிரிக்காவைச்சேர்ந்த அணைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தனது 134 பக்க அறிக்கையில் விளக்கியுள்ளர்.

”இன்னமும் முடிவுறாத போர்: சிறிலங்காவின் சித்திரவதைகள் மற்றம் பாலியல் வல்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர் 2009-2015′ என்ற தலைப்பிலேயே அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இவ்வறிக்கையில் 41 தடுப்பு முகாம் பற்றிய விபரங்கள் அங்கிருந்து தப்பிவந்தவர்களினால் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கொடுமையான விடயம் என்ன வெனறால் பல கைதிகள் கண்களைக்கட்டியபடியே கூட்டிச்சென்று அந்தநிலையிலேயே சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சித்திரவதையின்போதோ அல்லது அதன் பிறகோ கொலைசெய்யப்பட்டிருக்கலாம் அல்லது சித்வதையின்போது இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்கள் பலர் எந்த முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் அவர்களுக்கே தெரியமல்தான் இருந்திருக்கிறது.

தப்பித்து வந்தவர்களுள் 155 போர்களின் சாட்சியங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இலங்கையிலிருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்தே தம்மேலும ; தம் உறவினர்கள் மேலும் தொடுக்கப்பட்ட சித்தரவதைகள் பற்றிச் சாட்சியமளித்தள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்புக்கு எவ்வித உத்தரவாதம் இல்லாத சூழலிம் அவர்கள் இதைவெளிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளைவான ; கடத்தல்கள் மூலம் கடத்திச்சென்றவர்கள் வவுனியாவிலுள்ள யோசப் கேம்பில் வைத்தே பலவிதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கும் சித்தரவதைகளும் உள்ளாகியதையும் அதைச் செய்தது இராணுவப் புலவாய்வுத்துறையினர் என்றும் அவ்விக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதிப்போரின் போது ஒரு படையணியை வழிநடாத்தி பல கொலைச்சம்பவங்களுடனும் இனப்படுகொலைகயுடனும்; தொடர்படைய இலங்கைராணுவத்தின் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட பல இராணுவப்புலணாய்வுப்பிரிவு உறுப்பினர்கள் மீதும் குற்றச்செயற்பாடுகள் பதியப்பட்டு விபரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறு இருக்க போர் குற்றச்சாட்டின் முக்கிய பங்குதாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அமைதிப்படை நடவடிக்கைகள் தொடர்பான ஐ.நா பொதுச்செயளாலரக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினராக 2012 இல் நியமித்திருந்தது மகிந்த ராஜபக்ச அரசாங்கம். இது ரூடவ்ழ ஆதரவாளர்கள் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மத்தியில் உலகளவில் கடும் விமர்சனத்தைச் சந்தித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவருக்கும் இரகசிய முகாம் சித்தரவதை படுகொலைகளுக்கம் இருக்கும் மிக நெருங்கிய தொடர்பை யஸ்மின் சூகா அறிக்கை வெளிப்படுத்துகிறது.

புதிய ‘ நல்லாட்சி அரசாங்கம்’ இவை பற்றி எந்தக் காத்திரமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை. காணமல் போனவர்களுக்கு இறந்து விட்டதாக மரணச்சான்றிதழ் கொடுக்கப்போவதாக நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்தள்ளதாக சுகாதரா அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கிறார். பொங்கள்
விழாவில் ரணில் விக்கிரமசிங்க பேசியதை அரசாங்கம் நடைமுறையாக்கத் தயராகிக்கொண்டிருப்தையே இது காட்டுகிறது.

இராணுவத்தால் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞர் யுவதிகளின் நிலை என்ன? தாய்மார் மனைவிமாரால் ஒப்படைக்கபட்டவர்களுக்கு யார்பொறுப்பு? இவர்களுக்கும் சேர்த்தா மரணச்சன்றிதழ் வழங்கப்போகிறது அரசாங்கம். மழையிலும் வெய்யிலிலும் காய்ந்து தம் சொந்தங்களைத் தேடித் தவித்துக் கொண்டிருக்கும் உறவுகளுக்கு நீதி கிடைக்காதா?மரணச்சான்றிதழ் பல தாய்மாரின் ஏக்கத்தை துடைக்து அமைதியை கொடுத்துவிட போதுமாதுதானா? எந்த அடிப்படையில் காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் இறந்தார்கள் எதற்க்காக கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்டார்கள்? அதற்கொல்லாம் யார்பொறுப்பொடுப்பது? இவை பழய அரசின் செயற்பாடுகள் என தட்டிக் கழித்துச் சென்றுவிட முடியாது. பாதிக்கப் பட்டோருக்கு நீதி வேண்டும். இதையெல்லாம் தட்டிக்கேட்டு போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் யாருக்காக மௌனமாக இருக்கிறார்கள். நாளை காணமல் போணவர்களுக்கான மரணச்சான்றிதழ் கொடுக்கும் விழாவை இந்த அரசில் வாதிகள் மேடைப்போட்டு விழாவாக கொண்டாட தயாரானாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

இவற்றை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அனைத்து தடுப்பு முகாம்களும் உடனடியாக மூடப்படவேண்டும்.
தடுப்பு முகாம்களையும் – இரகசிய சித்திரவதை சிறைகளையும் உடனடியாக மூடு வதை முகாம்களை மூடு

தமிழ் சொலிடாரிற்றி :

* அனைத்து அரசியற் கைதிகளையும் விடுதலை செய்.

* ஆனைத்து தடுப்பு முகாம்களையும் இரகசிய சித்திரவதை முகாம்களையும் உடனடியாக மூடு.

* 41 தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் ஏனைய இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவர்களது தகவல்களையும் உடனடியாக வெளியிடு.

* இறந்தவர்களின் முழு விபரங்களும் உடனடியாக வெளியிடப்படவேண்டும்.

* இம்முகாம்களை நடத்திய இராணுவ தலைமை அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத் துறையினரை விசாரிக்க பாதிக்கப்பட்ட

* மக்களினைக் கொண்ட விசாரனைக் கமிசன் அமைக்கப்பட்டு மக்கள் முன் அவர்கள் குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும்.

* இந்த முகாம்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு தகுந்த நட்டரூடவ்டு வழங்கப்பட்டு அவர்கள் தமது

* வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க அனைத்து வசதிகளுகம் செய்து கொடுக்கப்படவேண்டும்.

[emailpetition id=”14″]