பின்வருவனவற்றின் அடிப்படையில் அணிதிரட்டலுக்கான கோரிக்கைகளை உருவாக்குவோம்.

 தமிழ் தோழமை இயக்கம்

1
உடனடியாக யுத்தத்தை நிறுத்து
இராணுவ அடக்குமுறையை உடனடியாக நிறுத்தித் தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இருந்து இராணுவத்தைத் திரும்பப்பெறு. மக்கள் கடத்தப்பட்டுக் காணாமற் போய்க் கொண்டிருப்பதை நிறுத்து.
2
தடுப்பு முகாம்களை மூடு.
தேர்வு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளான உணவு, தங்கும் வசதி, மருத்துவத் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்.
3
போர் வெறி பிடித்த இராஜபக்ச அரசுக்கு ஒரு சதமோ ஒரு துப்பாக்கி குண்டோ வழங்காதே.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான், யப்பான், மற்றும் இதர நாடுகள் இலங்கை அரசுக்கு வர்த்தக, இராணுவ உதவிகள் வழங்குவதை உடனடியாக நிறுத்து. இந்நாடுகளின் இராணுவப் பங்களிப்புக்கு எதிராக அந்நாட்டுத் தொழிலாளர்கள் அணிதிரள்வதை ஆதரிப்போம்.
4
அனைவருக்குமான ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்து.
பேச்சுரிமை,ஊடக உரிமை,சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களினதும் தொழிற்சங்க உரிமை, இனம் மதம் சாதி பால் வேறுபாடின்றி அனைவரது உரிமைகளையும் சமமாக மதிக்கும் கட்சிகள் சுதந்திரமாக இயங்க தேர்தலில் பங்குபற்றும் உரிமை, முதலான அனைத்து ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்து.

5
ஒன்றுபட்ட தொழிற்சங்கங்களை உருவாக்குவதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.
கூட்டமைக்கும் அல்லது அணிதிரள்வதற்கான உரிமையை வழங்கு. கொலை மற்றும் காணாமற் போகின்றவர்கள் பற்றிக் கண்காணிக்கும் ‘மக்கள் கண்காணிப்பு குழு’ போன்ற அமைப்புகள் சுதந்திரமாக பணியாற்றும் உரிமையை வழங்கு.
6
சுயநிர்ணய உரிமையை உத்தரவாதப்படுத்து
(நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயமான மக்கள் பிரதிநிதிகளின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு மூலமோ அல்லது ஒரு சட்ட நிர்ணய சபையை உருவாக்குவதன் மூலமோ அல்லது வேறேதாவது முறையிலோ சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்கான வழியேற்படுத்து.) வறிய மக்கள், தொழிலாளர்கள் ஒன்றுபடுதலின் அடிப்படையில் மக்கள் தம் எதிர்காலத்தைச் சுயமாக நிர்ணயிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவோம்.

தமிழ் தோழமை இயக்கம்

Be the first to comment

Leave a Reply